சமீபத்தில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசிய தலைவராக இருக்கும் சகாபூதின் ரஸ்வி பரேல்வி (ஷியாவின்) மதகுரு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும். அவர் இஸ்லாமியர்களை திரைப்படங்களில் தீவிரவாதியாகவும், கொலைகாரர்களாவும் காட்டியுள்ளார். இதனால் அவரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று உத்தரபரதேசத்தில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், ஜமாத்களிடமிருந்து பல எதிரிப்புகள் கிளம்பியது.
யார் இந்த ஷியாக்கள்?
நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த போற எனும் ஷியா பிரிவாகும்.இவர்கள் தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்ட பெயர் தான் ஷியா என்பதாகும். ஷியாக்கள் அலி (ரழி) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியே அரசியல் பிரவேசம் செய்தனர்.
இன்னும் இவர்கள் ‘ நபி (ஸல்) அவர்களுக்குப்பின் அலி (ரழி) அவர்கள் தான் கிலாபத் பொறுப்புக்கு உரியவர். அதனை அபூபக்கர் (ரழி) , உமர் (ரழி) , இருவரும் தட்டிப்பறித்துவிட்டனர்.
அதேபோன்று சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பின் (பாங்கு): “அல்லாஹு அக்பர்’ என்று தொடங்கும் பாங்கின் பொருள், “இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். “முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி’ என்பதே அந்த வார்த்தை. ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், “காகே ஷிபா’ எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட “சில்’ (கல்) ஒன்றை வைக்கிறார்கள். அதில் தான் இவர்கள் ஸஜ்தா செய்வார்கள்.
இந்திய முஸ்லிம்கள் எதிர்ப்பும், ஷியாக்கள் ஆதரவும்.

- 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை சந்தித்து அவருக்கு ஷியா முஸ்லிம்கள் ஆதரித்தர்கள்.
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்” என்று அதற்கான நன்கொடை (நிதி) வழங்கி ஷியாக்களின் ஆதரவை தெரிவித்தனர்.
- சிஏஏ சட்டம் முஸ்லிகளுக்கு எதிராக இருக்காது. அவர்கள் குடியுரிமை இழக்க நேரிடாது என்று ஆதரவு தெரிவித்தார்கள்.
- வக்ஃபு சட்டம் சிறுபான்மையினர்க்கு ஆதரவான இருப்பதாக ஷியா முஸ்லிம்கலில் அமைப்பு ஆதரவு தெரிவித்து சிறுபான்மை அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இது போன்று பல விஷயங்களில் முஸ்லிகளுக்கு எதிராக நடந்து கொண்டனர். இவர்களை தமிழக முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களில் குரல் போன்று மீடியாக்களில் சொல்லப்படுவைத் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவர்கள் பி.ஜே.பி. யின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள் என்று மக்களுக்கு புரியப்படுத்த வேண்டும்.
