இந்தியாவில் தனது 4G சேவையை துவங்கியது BSNL. 37 ஆயிரம் கோடி செலவில் நாடுமுழுவதும் 4G சேவையை பிரதமர் மோடி துவங்கிவைத்தார். இந்தியாவின் பொதுத்துறை மற்றும் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தின் 4ஜி சேவையை ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
மக்களுக்கு மத்தியில் குறையாக பேசப்பட்ட, நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கிற பி.எஸ்.என்.எல் (BSNL) இதன் மூலம் லாபமீட்டும் நிறுவனமாக மாறும் என்று நம்பப்படுகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 97,500 தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை பிஎஸ்என்எல் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்கும் வகையில் 14 ஆயிரத்து 180 4ஜி வலைபின்னல்கல் கட்டமைக்கபட்டுளது.
இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால், 4ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும்.
