தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வு… ஒரே நாளில் விலையில் உச்சம்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனிடையே, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
தங்கம் விலை கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது.
அதை தொடர்ந்து, நேற்று முன்தினமும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை (29-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60-ம், சவரனுக்கு ரூ. 480-ம் அதிகரித்து. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும். ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம். கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கும். ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஒரே நாளில் 2-வது முறையாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் 86,160க்கும், கிராமுக்கு ரூ. 70 அதிகரித்து ஒரு கிராம் 10,770க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் சவரனுக்கு 1,040ம், கிராமுக்கு ரூ. 130ம் அதிகரித்துள்ளது.
