மத்திய அரசின் நிதி அமைச்சகம், மாநிலங்களுக்கான வரி பகிர்வு அட்டவணையை இன்று விடுவித்தது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.4 ,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசுகள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதிக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிதியை மாநிலங்கள் தமது வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.18,227 கோடியும், ஹரியானா – ரூ. 11,111 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு.ஒட்டுமொத்தமாக மத்திய வரிப் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு ரூ. 1,01,603 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் நிதி அட்டவணை
உத்தரப் பிரதேசம் – ரூ. 18,227 கோடி
ஹரியானா – ரூ. 11,111 கோடி
பீகார் – ரூ. 10,219 கோடி
மேற்கு வங்கம் – ரூ. 7,644 கோடி
மத்திய பிரதேசம் – ரூ. 7,976 கோடி
மகாராஷ்டிரா – ரூ. 6,418 கோடி
ராஜஸ்தான் – ரூ. 6,123 கோடி
தமிழ்நாடு – ரூ. 4,144 கோடி
ஒடிசா – ரூ. 4,601 கோடி
ஆந்திரா – ரூ. 4,112 கோடி
குஜராத் – ரூ. 3,534 கோடி
சத்தீஸ்கர் – ரூ. 3,462 கோடி
ஜார்க்கண்ட் – ரூ. 3,360 கோடி
அசாம் – ரூ. 3,178 கோடி
தெலங்கானா – ரூ. 2,136 கோடி
கேரளா – ரூ. 1,956 கோடி
பஞ்சாப் – ரூ. 1,836 கோடி
அருணாசல பிரதேசம் – ரூ. 1,785 கோடி
உத்தரகாண்ட் – ரூ. 1,136 கோடி
