தீபாவளி பண்டிகை – 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

தீபாவளி பண்டிகை - 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
Spread the love

தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அக்., 16ம் முதல் 19ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,092 பேருந்துகளுடன், 4 நாட்களுக்கும் சேர்த்து 5,900 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,268 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே 108 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி. மகேஷ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து 14 ஆயிரத்து 268 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,110 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதே போன்று தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக அக்டோபர் 21 முதல் 23 வரை, தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் என ஆக மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மூன்று முனையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் :

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

1B.கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம் :

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

2. கோயம்பேடு பேருந்து நிலையம் :

கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

3.மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும். மேலும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *