வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..! 2025ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். ஆகியோருக்கு இந்த பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த_சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் இந்த பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட 6 துறைகளை மையபப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் வழங்கப்படும். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் சாதித்ததற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. பரிசு தொகை இவர்கள் 3 பேருக்கும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் பரிசுத்தொகை ரூ.10 கோடியாகும். இந்த பணத்தை மேற்கூறிய 3 பேரும் பகிர்ந்து நோபல் பரிசு பெற உள்ளனர். உலோக - கரிமம் சார்ந்த ஆய்வுக்காக (Metal-Organic frameworks) இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டோரின் விபரம் சுசுமு கிடகாவா; சுசுமு கிடகாவா, ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் 1951ம் ஆண்டு பிறந்தவர். வேதியியலில் பிஎச்டி படிப்பை முடித்த இவர் ஜப்பானின் கியோடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். ரிச்சர்ட் ராப்சன்; ரிச்சர்ட் ராப்சன்,பிரிட்டனை சேர்ந்தவர். இவர் 1937 ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள குல்ஸ்பர்ன் நகரில் பிறந்தார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் படித்து முடித்தவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஓமர் எம் யாகி; ஓமர் எம் யாகி, ஜோர்டான் நாட்டில் 1965ம் ஆண்டில் பிறந்தார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மேலம் கவ்லி எனர்ஜி நானோ சயின்ஸ் இன்ஸ்ட்டியூட்டின் நிறுவன இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
Spread the love

2025ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். ஆகியோருக்கு இந்த பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த_சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் இந்த பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட 6 துறைகளை மையபப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் வழங்கப்படும். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் சாதித்ததற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

பரிசு தொகை 

இவர்கள் 3 பேருக்கும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் பரிசுத்தொகை ரூ.10 கோடியாகும். இந்த பணத்தை மேற்கூறிய 3 பேரும் பகிர்ந்து நோபல் பரிசு பெற உள்ளனர். உலோக – கரிமம் சார்ந்த ஆய்வுக்காக (Metal-Organic frameworks) இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டோரின் விபரம் 

சுசுமு கிடகாவா;

 சுசுமு கிடகாவா, ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் 1951ம் ஆண்டு பிறந்தவர். வேதியியலில் பிஎச்டி படிப்பை முடித்த இவர் ஜப்பானின் கியோடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

ரிச்சர்ட் ராப்சன்;

 ரிச்சர்ட் ராப்சன்,பிரிட்டனை சேர்ந்தவர். இவர் 1937 ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள குல்ஸ்பர்ன் நகரில் பிறந்தார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் படித்து முடித்தவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

ஓமர் எம் யாகி;

ஓமர் எம் யாகி, ஜோர்டான் நாட்டில் 1965ம் ஆண்டில் பிறந்தார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மேலம் கவ்லி எனர்ஜி நானோ சயின்ஸ் இன்ஸ்ட்டியூட்டின் நிறுவன இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *