தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 18ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கூட்டமைப்பு) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் மற்றும் பங்களிப்பு கூடிய திட்டதை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசு துறைகளில் 30% காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நடக்கவிருக்கின்றன சட்டசபை தேர்தலுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டி தங்கள் போராட்டத்தை தீவிரபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
