பாபரி மஸ்ஜித் தகர்ப்பு – 32 ஆண்டு கால அநீதி.! – எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Spread the love

நேற்று, டிசம்பர் 6 அன்று பல்வேறு இடங்களில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். அவர்கள் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதியை இடித்தனர். ஆனால், கரசேவகர்களை மசூதி கருவறைக்குள் நுழையக் கூடாது அல்லது கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று யாரும் கோரிக்கையிடவில்லை. அங்குள்ள தலைவர்கள் இதை தவிர்க்க முன்வரவில்லை , அவர்கள் எளிதில் மசூதி இடிப்பைத் தடுக்க முடிந்திருப்பதாக லிபரான் அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்து!” மற்றும் “சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *