ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women’s Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
நேற்று நவி மும்பையில் நடைபெற்ற ஐ.சி.சி. பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24வது ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விளையாடினர். இருவரும் அசத்தலாக விளையாடி சதம் அடித்தனர். பிரதிகா 122 ரன்கள் (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார். மந்தனா 109 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்தார். இறுதியில் இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. மழை காரணமாக போட்டி டி.எல்.எஸ் முறையில் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்படி வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரூக் ஹல்லிடே 81 ரன்களும், இசபெல்லா கேஸ் 65 ரன்களும், அமெலியா கெர் 45 ரன்களும் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன் அரையிறுதிக்கும் தகுதிபெற்று அசத்தியது. ஆட்ட நாயகியாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.
அறை இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்;
ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.அறை இறுதியில் இந்திய அணி எந்த அணியுடன் மோதும் என்று ரசிகர்கள் இடையில் எதிர்ப்பை ஏற்பட்டுள்ளது.
