இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்..6.6 ரிக்டர் அளவு பதிவு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்..6.6 ரிக்டர் அளவு
Spread the love

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியாவில் அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது தொடர் கதையாகவுள்ளது. இந்தோனேஷியா பல ஆயிரம் தீவுகளை கொண்ட நாடு,அதில் சில தீவுகள் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அங்குள்ள மலுகு தீவுகளில் அமைந்துள்ள பாண்டா கடல் பகுதியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கத்தை ஜெர்மனி புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

நிலநடுக்கமானது சுமார் பூமியின் மேற்பரப்பில் இருந்து 137 கிமீ கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *