இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் சவூதியில் சமீபகாலமாக இஸ்லாமியர்களின் கொள்கைக்கும், குர்ஆனுக்கும் எதிராக செயல்படுவதாக மன்னர் சல்மான் மீது குற்றச்சாட்டப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக சவூதி அரேபியா, ஜித்தா மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய மதுபான கடைகளைத் திறக்கத் தயாராகி வருகிறது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் மது விற்கவும் குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 73 ஆண்டுகளாகவே இந்த தடை அமலில் இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த தடை நீக்கப்பட்டு சில வருடங்கலுக்கு முன்பு சினிமா தியேட்டர்கள், பார்கள் திறக்கப்பட்டன. இது, சில முஸ்லிமற்ற குடியிருப்பாளர்களுக்கான அணுகுமுறையை மெல்ல விரிவாக்கும் முயற்சியாகும். இந்நடவடிக்கை, இளவரசர் முகம்மது பின் சல்மான் மேற்கொண்டு வரும் சமூக மாற்றங்களின் இன்னொரு கட்டமாகும் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
ஒன்று தஹ்ரானில் உள்ள அராம்கோ முகாமுக்குள், மற்றொன்று ஜித்தாவில் உள்ள தூதர்களுக்காக. தஹ்ரானில் உள்ள கடை, அராம்கோவின் குடியிருப்பு வளாகத்துக்குள் இயங்கவுள்ளது, மேலும் அந்த எண்ணெய் நிறுவனம் சார்ந்த முஸ்லிமற்ற ஊழியர்கள் அதைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இசுலாமிய மார்க்க அறிஞர்கள் இதை எதிர்த்து பேசாமல் மௌனமாக இருப்பது மிக கவலை அளிப்பதாக அந்நாட்டு சில மக்கள் கவலை தெரிவிக்கின்றன.

unlocker.ai – The Ultimate AI Tool for Bypassing Restrictions and Unlocking Content Seamlessly!