தமிழ்நாடு அரசு குடியரசு தின விழா, சுதந்திர தின விழா ஆகியவற்றின் போது பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார், SW – அவ்வையார் போன்ற விருதுகள் கொடுத்து சிறப்பித்து வருகிறது.
அதேபோல் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. கோட்டை அமீர் அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” ஒவ்வெரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்து மசூதி மட்டுமல்ல, இந்து கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கூட கோட்டை அமீர் அவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது.
இது பிடிக்காத சிலர், 1994-ம் ஆண்டு அவரைக் கொடூரமாக கொலைசெய்தனர். இதையடுத்து, கோட்டை அமீரின் பெயரில், “ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படும்” என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிசுத்தொகையினை ரூ.25,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.5,00,000/- ஆக உயரத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த விருதை Alt News இன் முகமது ஜுபைர் அவர்கள் பெற்றார் என்பது குறிப்பதக்கது.
