தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீத தொகை பணியாளர் எதிர்கால நல நிதி (பிஎப்) கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தொகை ஊழியர்களின் வருமானத்தில் இருந்து எடுக்கபடும் அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர் சார்பில் பங்களிப்பாக செலுத்துகிறது. இந்த தொகையில் ஒரு பகுதி பணியாளர் நல நிதி (EPF) கணக்கில் சேரும்; மற்றொரு பகுதி ஓய்வூதிய திட்டமான (EPS) கணக்கில் செல்கிறது.
பிஎப் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் பணிநிறைவு அல்லது ஓய்விற்கு பிறகு பெரிய தொகையாக நிதி பெறுகிறார்கள். அதேசமயம், இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. தற்போது ஓய்வூதியதாரர்கள் பெறும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும்.
இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக எழுந்து வருகிறது. இதையடுத்து, பணியாளர் புலனாய்வு நிதி அமைப்பு (EPFO) தற்போது இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான முக்கிய முடிவுகள் அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ள EPFO அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது நடைமுறைக்கு வந்தால், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
EPFO பயனாளர்களுக்கு குட் நியூஸ். இனி மாதாந்திர ஓய்வூதியம் தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீத தொகை பணியாளர் எதிர்கால நல நிதி (பிஎப்) கணக்கில் செலுத்தப்படுகிறது.இந்த தொகை ஊழியர்களின் வருமானத்தில் இருந்து எடுக்கபடும் அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர் சார்பில் பங்களிப்பாக செலுத்துகிறது. இந்த தொகையில் ஒரு பகுதி பணியாளர் நல நிதி (EPF) கணக்கில் சேரும்; மற்றொரு பகுதி ஓய்வூதிய திட்டமான (EPS) கணக்கில் செல்கிறது.