UPI கட்டணங்களுக்கு கைரேகை, முக அங்கீகாரத்தை பயன்படுத்தலாம்.! புதிய வசதி

UPI கட்டணங்களுக்கு கைரேகை, முக அங்கீகாரத்தை பயன்படுத்தலாம்.! புதிய வசதி
Spread the love

UPI பணம் செலுத்தும்போது, PIN ஐ உள்ளிடுவதற்குப் பதிலாக, பயனர்கள் தங்கள் தொலைபேசியின் முக அடையாளம் (Face scan)காணுதல் அல்லது கைரேகை ஸ்கேன் (Finger scan) மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்க விருப்பம் விருப்பம் தெரிவிக்கலாம்.

நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை பலரும் UPI முறையை பயன்படுத்தியே பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் UPI மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தேசிய கட்டணக் கழகம் (NPCI), UPI பரிவர்த்தனைகளுக்கு முகம் அடையாளம் காணுதல் மற்றும் கைரேகை ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய முறை இன்று மும்பையில் நடைபெறும் குளோபல் ஃபின்டெக் விழாவில் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போதைய PIN தேவையை விருப்பத்தேர்வாக மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இந்திய அரசின் ஆதார் அமைப்பிலிருந்து நேரடியாக பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்க, உங்கள் தரவு உங்கள் ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட பயோமெட்ரிக் தகவலுடன் சரிபார்க்கப்படும், இது இந்த முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று கூறப்படுகிறது.

இந்த அம்சம் கிட்டத்தட்ட அனைத்து UPI பயன்பாடுகளாலும் ஆதரிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மட்டுமல்லாமல், மற்ற டிஜிட்டல் பேமெண்ட்களிலும் பணத்தை அனுப்பியபின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதன்டிகேஷனில் ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints) மற்றும் பேசியல் ரிககனைசேஷன் (Facial Recognition) சேர்க்கப்பட இருக்கிறது. பணத்தை அனுப்ப இதையும் பயன்படுத்த வேண்டும் இதனால் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *