அமெரிக்காவை விட்டு ஓடும் ஐடி நிறுவனங்கள்

அமெரிக்காவை விட்டு ஓடும் ஐடி நிறுவனங்கள்
Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்-1பி விசா மீதான நடவடிக்கை அங்குள்ள பல்வேறு டெக் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பலதுறை நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

இதனால் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அப் படி மாற்றினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பேரிழப்பாக இருக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தில் தகவல் டெக் நிறுவனங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் இப்போது 1,700 GCC, அதாவது (குளோபல் கெபாசிட்டி சென்டர்கள்) உள்ளன. உலகெங்கும் இதுபோல 3200 மையங்கள் உள்ள சூழலில், அதில் பாதிக்கு மேல், அதாவது 1700 மையங்கள் இந்தியாவில் உள்ளது. இது உலகளவில் உள்ள மொத்த GCC-களில் பாதி இந்தியாவில் உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களது திட்டத்தில் மாற்றம் கொண்டுவர திட்டம் தீட்டி வருகின்றன. இதற்கிடையே அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு, விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் சர்வதேச திறன்களுடன் இருக்கும் இந்தியா GCC-கள் உறுதியான மையங்களாக உருவெடுத்துள்ளன.

GCC-கள் இந்தச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானவை. அவை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சரியாக இருக்கிறது. இப்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தேவைகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டன. இதனால் வரும் காலங்களில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் முக்கிய துறையாக இருப்பதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இந்தத் துறையின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல் இந்தியாவுக்குத் தொடர்ந்து வருமானத்தை அளிக்கும் ஒரு துறையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *