ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 13 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 13 பேர் பலி..!
Spread the love

ஆப்கானிஸ்தானில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனிடையே நிலநடுக்கத்தின் போது கட்டங்கள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

13 பேர் பலி 

 ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் அச்சம் அதிகரித்து உள்ளது .

வடக்கு ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட மூன்று நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *