இந்தியாவில் பொருளாதாரம் உயரும்: உலக வங்கி வெளியிட்ட கணிப்பு!

இந்தியாவில் பொருளாதாரம் உயரும்: உலக வங்கி வெளியிட்ட கணிப்பு!
Spread the love

2026 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜூன் மாதத்தில் அது 6.3 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. தற்போது அதிகரித்து 6.5 சதவீதமாக இருக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில், “இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக தொடர்ந்து இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. வலுவான உள்நாட்டு நுகர்வு, வேளாண்மை உற்பத்தி மேம்பாடு மற்றும் கிராமப்புறங்களில் ஊதிய உயர்வு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தெற்காசிய நாடுகளில் வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் அவ்வபோது ஆட்சி மாற்றம், ஆட்சி கவில்பு போன்ற மாற்றங்களால் நாட்டின் பொருளாதாரத்தில் பல குறுபடிகள் ஏற்பட்டன. தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளதால் பொருளாதாரம் சீராக சென்று கொண்டிருக்கிறது என்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *