ஏப்ரல் மாதங்களில் நடந்த தேர்தளில் பல குளறுபடிகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் புகார்

Spread the love

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அவ்வப்போது பல குற்றசாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர் கட்சிகள் ஆளும் ஒன்றிய பா.ஜ.க மீது குற்றம் சாட்டுவது வாடிக்கை ஆகிவிட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து, ஒரு கட்சிக்கு ஆதரவாக மாற்றியமைத்து வெற்றி அடைய முடியும், ஹேக் செய்ய முடியும் என்றெல்லாம் பலவாறாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டு கூறிய யாராலும் அதை நிரூபிக்க முடியவில்லை. பல பெரிய கட்சிகள் கூட தோல்வி அடைந்து சிறிது காலங்கள் பேசுவார்கள் அதற்கு பின்பு அதை பற்றி யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.

ஒடிசாவில் உள்ள பி.ஜூ ஜனதா தளம் கடந்த ஏப்ரல் மாதங்களில் நடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் பல சதவீத ஓட்டு வித்தியாசகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ஓட்டு பதிவான வாக்குகளை விட தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குகள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்திய தேர்தலில் நடந்த மிகப்பெரிய மோசடி, தேர்தல் அலுவலரால் எண்ணப்பட்ட வாக்குகளில் எண்ணிக்கையும், மாவட்ட தேர்தல் ஆணையர் வெளியிட்ட எண்ணிக்கையும் மிக பெரிய வித்தியாசம் இருப்பது ஏன் என்று அடுக்கடுக்கான பல கேள்விகளை தேர்தல் ஆணையிடம் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *