ஜன. 2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.

Spread the love

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை (2-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் சூழலில், பள்ளிகள் திறப்பு இன்னும் நான்கு நாட்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

நாளை (2-ம் தேதி) வியாழக்கிழமை பிறகு வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் மட்டுமே வேலை நாளாகவும் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறையாக வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு சமூக வலைதளத்தில் விடுமுறை நீட்டிக்கப்படும் என்று செய்தி பரவியது.

ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை ஜன 2ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினம் வருவதால் அந்த விடுமுறையை கருத்தில் கொண்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *