தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்..! 5 ஆண்டுகளில் ஒரே நாளில் அதிகபட்சமாக குறைந்தது தங்கத்தின் விலை!!!

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்..! 5 ஆண்டுகளில் ஒரே நாளில் அதிகபட்சமாக குறைந்தது தங்கத்தின் விலை!!!
Spread the love

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மக்கள் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் வேளையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கம் முதல் வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தது. இதற்கு டிரம்ப்பும் அவர் எடுத்த நிலைப்பாடுகளும் தான் பிரதானக் காரணம்.. டிரம்பின் பல சர்ச்சைக்குரிய முடிவுகள் தங்கம் விலையை எங்கோ உச்சத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.

தங்கம் விலை அடிக்கடி அதிரடி மாற்றம் 

சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் கூட சீக்கிரம் தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் எல்லாமே மெல்ல மாற ஆரம்பித்தது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாய் என்ற மார்க்கை நோக்கி நகர்ந்தது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலையை இரண்டு முறை உயர்த்தும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போனது.

இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக நிலைமை மெல்ல மாறி வருகிறது. தங்கம் விலை, மெல்லக் குறைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. இது பொதுமக்களுக்கு மிகப் பெரியளவில் மகிழ்ச்சியைத் தரும் விஷயமாகவே இருக்கிறது.

தங்கம் விலை இந்தளவுக்குக் குறைய மூன்று விஷயங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. முதலில் தங்கம் விலை எக்குத்தப்பாக எகிறிவிட்ட நிலையில், இதில் முதலீடு செய்தவர்கள் லாபத்தை எடுக்கத் தங்கள் கையிருப்பை விற்கிறார்கள். அடுத்து வர்த்தக விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல உக்ரைன் போர் விவகாரத்திலும் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுபோல நிலைமை மாற ஆரம்பித்துள்ளதே தங்கம் விலை குறையப் பிரதானக் காரணமாகும்.

குறையும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்றும் தங்கம் விலை குறைந்தே இருக்கிறது. நேற்று போலப் பெரியளவில் தடாலடியாக விழவில்லை என்றாலும் கூட இன்றும் ஓரளவுக்குத் தங்கம் விலை குறைந்தே இருக்கிறது. எனவே, இந்தியச் சந்தையிலும் கூட சற்று தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை

21.10.2025 (மாலை)- ஒரு சவரன் ரூ.92,320

21.10.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.93,600

20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000

19.10.2025 – ஒரு சவரன் ரூ.95,360

18.10.2025 – ஒரு சவரன் ரூ.96,000

17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600

16.10.2025 – ஒரு சவரன் ரூ.95,200

15.10.2025 – ஒரு சவரன் ரூ.94,880

14.10.2025 – ஒரு சவரன் ரூ.94,600

13.10.2025 – ஒரு சவரன் ரூ.92,640

12.10.2025 – ஒரு சவரன் ரூ.92,000

11.10.2025 – ஒரு சவரன் ரூ.92,000 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *