இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 3 நாட்களில் மட்டும் 50 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
