இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சார்ந்த வெள்ளையபுரம் என்ற கிராமத்தில் மீலாது விழாவை முன்னிட்டு போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் திரளாக வாலிபர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். பேரணி பள்ளிவாசலில் தொடங்கி மெயின் ரோடு வழியாக முக்கிய தெருக்கள் வந்து முடிவடைந்தது.
இது சம்பந்தமாக பள்ளிவாசல் உறுப்பினர் சபியுதீன் அவர்கள் கூறுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. அதிக அளவிலான நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க எல்லா மக்களும் விரும்புகிறார்கள். தமிழக அரசும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மது மட்டும்மல்லாம் தடை செய்யப்பட பான் மசாலா போன்ற பொருட்கள் தினமும் போலீசாரால் பிடிபடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனவே எங்கள் ஊர் ஜமாத்தார்கள் இந்த மீலாது விழாவின் மூலம் மக்களுக்கு போதை ஒழிப்பு பேரணி நடத்தி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருங்கால சமுதாயத்திற்கு வழிகாட்டியகவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது என்பதாக கூறினார்.
போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பி, முக்கிய சாலைகளில் மதரசா மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த அனைவரும் மிகவும் பாராட்டினர்,
இதில் ஜமாத்தார்கள், வாலிபர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
